காணொளியில் தோன்றி பாராட்டு தெரிவித்த மோடி – சந்தோஷத்தில் கேலோ இந்தியா போட்டி வீரர்கள்

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி வாயிலாக பாராட்டு தெரிவித்தார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், விளையாட்டு போட்டிகள் நடத்தி, சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அந்த வகையில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏற்பாட்டில், கடந்த ஒரு மாதமாக கைப்பந்து போட்டி, கபடி, கோ கோ, சிலம்பம், யோகா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, இன்று பரிசு வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்டோர், வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, காணொலி வாயிலாக பங்கேற்று, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை பாராட்டினார்.

Exit mobile version