அடல் பிஹாரி வாஜ்பாய் 1924-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி, மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார். 47 ஆண்டுகள் எம்.பியாக இருந்த அவர், 1998 முதல் 2004 வரை, இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். இன்று வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் என்பதால், டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இவர்களை தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடியும், வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை தலைவர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

















