அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன். தனது அடையாள அட்டையை தூக்கி எறிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தொகுதி பிரச்சினை குறித்து முதலமைச்சரை சந்தித்து தெரிவிப்பதற்காக ஆடலரசன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார். ஆனால், பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

நீண்டநேரம் காத்திருந்தும் அனுமதி தராததால், தனது முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கான அடையாள அட்டையை கீழே தூக்கி எறிந்தார். இதையடுத்து அவரை திமுக நிர்வாகிகள் சமாதானம் செய்தனர். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஆடலரசன் கூறியுள்ள தொகுதி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

Exit mobile version