100 நாள் திட்டத்துக்கு மாற்றாக. மத்திய அரசு, விக்சித் பாரத் என்ற புதிய திட்டத்தை கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, 100 நாளாக இருந்த வேலைக் காலம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த திட்டத்துக்கு மத்திய அரசே நிதி ஒதுக்கி வந்த நிலையில் இனி 40 சதவீதம் மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீது இன்று எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே மக்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது மசோதா நகலை அமைச்சர் முன்னிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்தனர். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

















