தங்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கும் வழக்கு தொடர்ந்த நிதி நிறுவனத்திற்கும் இடையே எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லை என தெரிவித்தார். தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து 10 நாட்களில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டதாகவும், கைது உத்தரவோ அல்லது பிடிவாரண்டோ நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும் சுபாஷ் சந்திர போஸ் விளக்கம் அளித்தார். வேறு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட காசோலையை தவறுதலாக பயன்படுத்தியதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்றும் அவர் கூறினார்.

















