சபரிமலை அய்யப்பன் அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜையை முன்னிட்டு, அய்யப்பனுக்கு இன்று மாலை தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலையில், மண்டல பூஜை நாளை நடக்கிறது. மண்டல பூஜை நடக்கும் நாளில், அய்யப்பனுக்கு பந்தளம் மன்னர் வழங்கிய, 451 சவரன் தங்க அங்கி அணிவிக்கப்படும். மண்டல பூஜைக்கு பிறகு, இந்த அங்கி கேரள மாநிலம் ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் வைத்து பாதுகாக்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டின் மண்டல பூஜைக்காக, அய்யப்பனுக்கான தங்க அங்கி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, இன்று மாலை அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, நாளை காலை 10 மணி முதல் 11 மணிவரை, அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடத்தப்படும். சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.














