புதுவை விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் – துப்பாக்கியுடன் வந்த நபரால் திடீர் பரபரப்பு

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு, துப்பாக்கியுடன் ஒருவர் வந்ததால் திடீர் பரபரப்பு நிலவியது.

விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சிவகங்கை மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் பிரபு, அவருடைய உதவியாளர் டேவிட் ஆகியோர் வருகை தந்தனர். அவர்களை சோதனை செய்தபோது, டேவிட்டிடம் கைத்துப்பாக்கி கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீஸார், துப்பாக்கிக்கு முறையான உரிமம் இருக்கிறதா? என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில், புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை என, காவல்துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு-புதுச்சேரி எல்லை பகுதியில் காலாப்பட்டு, முல்லோடை, மதகடிப்பட்டு, கோரிமேடு ஆகிய இடங்களில் போலீஸார் தடுப்புகள் அமைத்து சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து வரும் த.வெ.க தொண்டர்களை அவர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Exit mobile version