தங்கத்த பாக்க மட்டும்தான் முடியும்போல…இன்று மட்டும் 2 முறை விலை ஏற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று பிற்பகலில் சவரனுக்கு மேலும் 960 ரூபாய் உயர்ந்து, ஒரே நாளில் 2 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் 98 ஆயிரத்து 960 ரூபாயாக உச்சம் பெற்றுள்ளது.

சர்வதேச பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து வருகிறது.

காலையில் ஒரு கிராம் 12 ஆயிரத்து 250 ரூபாயாக இருந் ஆபரணத் தங்கம், பிற்பகலில் மேலும் 120 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் 2 ஆயிரத்து 560 ரூபாய் உயர்ந்து, 98 ஆயிரத்து 960 ரூபாயை எட்டியுள்ளது. இதன்மூலம், ஒரே ஆண்டில் ஆபரணத் தங்கம், சவரனுக்கு சுமார் 42 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளியின் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துகொண்டே வருகிறது. ஜனவரி முதல் தேதியில் ஒரு கிலோ வெள்ளி 98 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், இன்று 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

Exit mobile version