டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், நடுவானில் பறக்கும்போது பழுது ஏற்பட்டதால், அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
இன்று 300 பயணிகளுடன், போயிங் ரக விமானம் டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறக்கும்போது, ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதை, விமானி கண்டறிந்தார்.
இதனால், விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க, விமானி முடிவு செய்தார். அதன்படி, மீண்டும் அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள், ஊழியர்கள் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் மாற்று விமானம் மூலம், அவர்கள் மும்பை அனுப்பி வைக்கப்பட்டனர்.
