கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணிகள் வாங்கிய வாக்குகள் மூலம் 84 எம்எல்ஏ தொகுதிகளை வெல்ல முடியும் என்பதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் சென்னையை அடுத்த ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று இறுதியாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்ற அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியும், பிஜேபி கூட்டணியும் வாங்கிய வாக்குகளை கூட்டினால் 41.33 சதவீதம் என்று தெரிவித்தார்.
