தேனி மாவட்டம் போடியை சேர்ந்த திமுக நிர்வாகி, ஏலக்காய் ஏற்றுமதி செய்ததில், 70 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.
தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவியாக ராஜராஜேஸ்வரி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் சங்கர், திமுக செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சியின் கவுன்சிலராகவும் உள்ளார். இதுதவிர ஏலக்காய் வியாபாரமும் செய்து வருகிறார். ஏலக்காய் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறை, ஜி.எஸ்.டி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ஏலக்காய் மூடைகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதில் முறைகேடு செய்து, சங்கர் 70 கோடி ரூபாய்க்கு மேல், வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
















