சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதோடு, வன்னியர் சமூகத்தினருக்கு, 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் ராஜரத்தினம் அரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், செயல் தலைர் காந்திமதி, கௌரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும், அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும், வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
