வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய, எதிர்க்கட்சி தலைவர் ஷரிஃப் ஒஸ்மான் ஹாதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் உயிரிழந்தார். இதனால், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் குதித்து இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோடு, சிறுபான்மை இந்துக்களையும் தாக்கி வருகின்றனர். திபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வன்முறை கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தின் முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தின் அலுவலகத்திற்கும் வன்முறை கும்பல் தீவைத்துள்ளது. இதனிடையே, இந்து இளைஞர் கொலை வழக்கில் 7 பேரை கைது செய்திருப்பதாக, இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, தாகாவில் உள்ள மாணிக் மியா அவென்யூவில், உயிரிழந்த ஒஸ்மான் ஹாதியின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன. அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
















