நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 11 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 மார்ச் ஒன்றில் தொடங்கும் என கூறினார். உலக அளவில் மிகப்பெரிய அளவிலான மக்கள் கணக்கெடுப்பாக நம் நாட்டில் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
அடுத்தாண்டு கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 445 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
