தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக-வினர் இன்று முதல், கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
விருப்பமனுக்களை பூர்த்தி செய்து, வரும் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

















