திருட வந்த வீட்டில் காசு இல்ல…திருடன் ஆத்திரத்தில் செய்த செயல்!

நெல்லையில் ஜேம்ஸ் பாண்ட் என்பவரின் வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் புகுந்த திருடன், வீட்டின் மிக முக்கிய இடங்களில் நகை அல்லது பணம் ஏதாவது கிடைக்கிறதா என்று ஆராய்ந்துள்ளான். திருட வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து வெகு நேரமாகியும் திருடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த திருடன் அங்கிருந்த பொருட்களை உடைத்தும், மற்ற பொருட்களை கீழே தள்ளியும் வீட்டை அலங்கோலம் செய்துள்ளான். மேலும் ஆத்திரம் அடங்காத திருடன் பீரோவை உடைத்து நகை, பணம் உள்ளதா? என்று தேடிவிட்டு நான்கு பக்கம் கொண்ட கடிதத்தை எழுதி வைத்து சென்றுள்ளான்.

அந்த கடிதத்தில், வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்ல..’ உனக்கு எதுக்கு இத்தனை CCTV கேமரா என்று? கேள்வி கேட்டும், அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாறாமல் செல்ல காசு வைக்கவும். என்னை மன்னித்து விடுங்கள் இப்படிக்கு திருடன்” என்று எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான். திருட வந்த வீட்டில் பொருள் எதுவும் சிக்காத விரக்தியில் திருடன் இப்படி எழுதி வைத்து விட்டு சென்ற கடிதம் இணையத்தில் இப்போது வைரலாகி வருகின்றது.

Exit mobile version