சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக முன்னெடுப்புகளை மேற்கொள்கின்ற மாநிலமாக, தமிழகம் விளங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் போன்றவற்றை வலியுறுத்தி, தமிழக துறவியர் பேரவை சார்பில், கடந்த 5 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய மிதிவண்டி பேரணி, சென்னை சாந்தோமில் இன்று முடிவடைந்தது.
இதன் நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, பேரணியில் பங்கேற்றவர்களை சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இயற்கையை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தலைநகர் டெல்லி காற்று மாசுபாடு பிரச்சினையில் சிக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளே காரணம் என்றும் உதயநிதி தெரிவித்தார்.














