தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் 99 சதவீத எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வீடு வீடாக சென்று கணக்கீட்டு படிவங்கள், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 12 மாநிலங்களில் 99 சதவீத எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 12 மாநிலங்களிலும் 50 கோடியே 47 லட்சம் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதில், சுமார் 40 சதவீத எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது















