டிசம்பர் மாதத்தில் இன்னும் சில முன்னாள் அமைச்சர்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று, கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
த.வெ.க-வில் இணைந்த பிறகு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முதன் முறையாக, தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்கு நேற்று மாலை வந்தார். அப்போது ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிறப்பான எதிர்காலம் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.















