எம்.ஜி.ஆர் வழியைப் பின்பற்றி விஜய் சென்றுகொண்டிருப்பதால், அதிமுக-வைப் போன்று த.வெ.க-வும் நிச்சயம் வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
த.வெ.க.வில் இணைந்த பிறகு தனது சொந்த ஊருக்கு கோவை வழியாகப் செல்ல சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எம்.ஜி.ஆர் வழியில் விஜய் அரசியல் பயணம் இருப்பதால் வெற்றி நிச்சயம் என்றார்.
