பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து, 30-ஆம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, மோதல் ஏற்பட்ட நிலையில், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.
ஆனால் பாமகவின் தலைவராக, அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக, அன்புமணி தரப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாவரம் தோட்டத்தில், மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
