பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்ளூர் மக்களுடன் இணைந்து, குளத்தில் இறங்கி மீன்பிடித்தார்.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதி என, 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பெகுசராய் என்ற இடத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது, அங்குள்ள குளம் ஒன்றில் மீனவர்கள் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த ராகுல் காந்தி, அவரும் குளத்தில் குதித்து, மீனவர்களோடு சேர்ந்து வலையை பிடித்து இழுத்து மீன்பிடித்தார்.
அப்போது, துணை முதல்வர் வேட்பாளர் முகேஷ் சஹானி, மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர் கன்னையா குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
