காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசின் தமிழகத்திற்கு எதிரான முந்தைய நிலைப்பாடுகளை திமுக அரசு பட்டியலிட்டிருந்தால், விரிவான திட்ட அறிக்கையை பரிசீலனை செய்ய, உச்சநீதிமன்றம் நிச்சயம் உத்தரவிட்டிருக்காது என, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் திறமையின்மை காரணமாக, வலுவான வாதங்களை முன் வைக்காததால், மேகதாது குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை குழுவை சேர்ந்த வல்லுநர்கள் பரிசீலிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
