ஓபிஎஸ்-ன் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- வரும் 24 ஆம் தேதி அறிவிக்கிறார்

எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார். அவரை அதிமுக கூட்டணியில் சேர்க்க, அண்ணாமலை உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை டெல்லி சென்றிருப்பதாக கூறப்படும் நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அப்போது, ஓ.பி.எஸ்-ஐ அதிமுக-விலும், டிடிவி.தினகரனை கூட்டணியில் சேர்ப்பதற்கும், சாதகமான பதிலை ஈபிஎஸ் தரவில்லை என தகவல் வெளியானது.

நாளை மறுநாள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது அந்த முடிவை, எம்ஜிஆர் நினைவு தினமான, வரும் 24-ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்துள்ளார்.

அதிமுகவுக்குள் ஓ. பன்னீர்செல்வத்தைக் கொண்டு வரும்படி அமித்ஷா¬வே கூறினாலும், எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. நிச்சயமாக அதிமுகவில் இணைய சாத்தியம் இல்லை என்பது ஓ. பன்னீர்செல்வத்துக்கு கிட்டத்தட்ட தெரிந்துவிட்டிருக்கும் நிலையில்தான், அடுத்தக்கட்ட நகர்வு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

Exit mobile version