அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்களும், தமிழக மக்களும் விரும்புவதை அமித்ஷாவிடம் தெரிவித்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்துறை அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக குறிப்பிட்டார். மேலும், தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் எண்ணத்தை அமித்ஷாவிடம் கூறியதாகவும் அவர் கூறினார். தனிக்கட்சி தொடங்குவேன் என்றும் எப்போதும் கூறவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
