தெரு நாய்களைப் பிடித்து, தடுப்பூசி செலுத்திய பின்னர், அவற்றை மீண்டும் பிடித்த இடத்திலேயே விட்டு விட வேண்டும். காப்பகங்களில் அடைக்கக்கூடாது என்ற நடிகை நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் தெரு நாய்களுக்கு ஆதரவாக “ஹெவன்ஸ் பார் அனிமல்ஸ்” என்ற அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பினர்.
பேரணியில் நடிகையும், நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவருமான நிவேதா பெத்துராஜூம் கலந்து கொண்டார். பேரணியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைத்தால், அவை ஒன்றுக் கொன்று, சண்டையிட்டு செத்து விடும் என்பதால், உரிய முறையில் தடுப்பூசி செலுத்திய பின்னர், அதே இடத்தில் விட்டு விட வேண்டும் என்றார்.
















