மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதிஷ் குமார் – பிஜேபிக்கு துணை முதல்வர் பதவி

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றக் கட்சித் தலைவராக நிதீஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் காலை பீகார் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பி.ஜே.பி. 89 இடங்கள், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்கள் என தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று பாட்னாவில் நடந்த ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும், பின்னர் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்திலும், நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்த நிதீஷ்குமார், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை அடுத்து, நிதிஷ்குமார் காலை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் பதவி பி.ஜே.பியை சேர்ந்த சாம்ராட் சவுதாரி அல்லது விஜய் சின்ஹாவுக்கு வழங்கப்படும் என்றும், சபாநாயகர் பதவியையும் பி.ஜே.பி. க்கு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version