எப்போதெல்லாம் திமுகவுக்கு பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம் மொழி பிரச்சினையை கையில் எடுப்பார்கள் என பிஜேபி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகராட்சி நிர்வாகத் துறை பணியிடங்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள ஊழலையும், மணல் அள்ளியதில் நடைபெற்ற ஊழலையும் அமலாக்கத் துறை ஆதாரத்துடன் வெளியிட்டதால், திமுக மொழி பிரச்சினையை கையில் எடுத்து நாடகம் ஆடுவதாக விமர்சித்தார்.
வாக்காளர் பட்டியலில் மோசடியாக போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதால், சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை திமுக எதிர்க்கிறதோ என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

















