திமுகவை எளிதாக வெல்வோம் – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தேசிய ஜனநாயக கட்டணி எளிதாக வெற்றிப் பெறும் என்று, தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வருகை தந்த நயினார் நாகேந்திரன், காரமடை அரங்கநாதர் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், தேரம்பாளையம் கிராமத்தில் பல்வேறு தரப்பு மக்களுடன் கலந்துரையாடினார்.

விவசாயிகள், நெசவாளர்கள், சமூகநல இயக்கங்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சொத்துவரி, மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டண உயர்வு மட்டுமின்றி, பல்வேறு ஊழல் முறைகேடுகளாலும், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறினார்.

Exit mobile version