திருப்பதிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வழிபாடு செய்தார்.
ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் தலைவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் காரில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்ற குடியரசுத் தலைவரை தேவஸ்தான் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பத்மாவதி தாயாரை வழிபட்ட குடியரசுத் தலைவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து காரில் புறப்பட்ட குடியரசுத் தலைவர் திருப்பதி மலைக்கு சென்றார். திருப்பதி மலையில் இரவு தங்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று ஏழுமலையானை வழிபடுகிறார்.
