கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலான உயிரிழந்த குட்டி குரங்கை, தாய் குரங்கு தூக்கிக்கொண்டு அலையும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களில் குரங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி பகுதியில், ஒரு வாரத்திற்கு மேலாக உயிரிழந்த குட்டி குரங்கினை, தாய் குரங்கு ஒன்று தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. குட்டி உயிரிழந்தது கூட தெரியாமல் அலையும் தாய் குரங்கின் செயல் காண்போரை கண் கலங்க செய்தது.
மேலும், வனத்துறையினர் உயிரிழந்துள்ள குரங்கு குட்டியை தாயிடம் இருந்து மீட்டு புதைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
