உலகளவில் ஏற்படும் எந்தவொரு நெருக்கடிகளுக்கும், இந்தியா தான் முதலில் பதிலளிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் நவ ராய்ப்பூர் நகரில் பிரம்மகுமாரிகள் அமைப்பிற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்துவைத்துப் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பணியில் தனது அரசு முனைப்புடன் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக தீவிரவாதத்தை ஒழித்துள்ள இந்தியா, தற்போது மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார். உலகில் எங்கும் ஒரு நெருக்கடி அல்லது பேரழிவு ஏற்படும் போதெல்லாம், இந்தியா, ஒரு நம்பகமான கூட்டாளியாக, உடனடியாக உதவ முன்வருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


















