பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, தாமர்ஹி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, முதல்கட்ட வாக்குப் பதிவில் அதிகளவு வாக்குகள் பதிவானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், எதிர்கட்சிகளுக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
புத்தகம், மடிக்கணினி மற்றும் விளையாட்டு சாதனங்களை குழந்தைகளுக்கு தாங்கள் வழங்குகிறோம். ஆனால், ஆர்ஜேடி துப்பாக்கிகளை வழங்குவது குறித்து பேசுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
