தமிழ் மொழி வடஇந்திய மக்களிடமும் பிரபலமடைந்து வருவது பெருமையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அண்மையில் நிறைவடைந்த காசி தமிழ் சங்கமம் நான்காம் ஆண்டு நிகழ்ச்சியின்போது, ஏராளமானோர் தமிழ் மொழியைக் கற்பதற்கு ஆர்வம் காட்டியதாகக் கூறினார்.
இதன் மூலம் காசி மக்களிடையே தமிழ் மொழி பிரபலமடைந்து வருவது தெளிவாகத் தெரிந்ததாகவும், இது மன நிறைவைத் தருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவுடன் வலுவான கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ள ஃபிஜி நாட்டிலும் தமிழ் பிரபலம் அடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மோடி குறிப்பிட்டார்.
