மதுரையில் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
கோவில் நகரமான மதுரைக்கும், தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கும், ”நோ மெட்ரோ” என மத்திய அரசு நிராகரித்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிஜேபியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக, இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என, முதல்வர் விமர்சித்துள்ளார். பிஜேபி ஆளும், மாநிலங்களில் உள்ள சிறிய, இரண்டாம் நிலை மாநகரங்களுக்குகூட, மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதலை வழங்கிய மத்திய அரசு, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது, அழகல்ல என்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி கருத்தியலை சிதைப்பதை, தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ ரயில் பணிகளை மத்திய அரசு தாமதப்படுத்தி, தடுக்க நடந்த முயற்சிகளை முறியடித்தது போல, மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவோம் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
