மத்திய அரசின் புதிய தொழிலாளர் சீர்திருத்த சட்டங்கள் பன்னாட்டு முதலாளிகளை வாழவைக்கும் அம்சங்களைக் கொண்டிருப்பதாக திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில், மத்திய அரசின் சட்டங்களைக் கண்டித்து, தொமுக தலைவர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், பெரு நிறுவனங்கள் குறைந்த செலவில் சுலபமாக தொழில் செய்வதற்கும், பெரு முதலாளிகளுக்குசிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையிலும் புதிய சட்டங்கள் உள்ளதாகக் கூறினார்.

















