ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்க கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் ஜெயக்குமார் கூறினார்.பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்ற கேள்விக்கு அது பற்றிய பேச்சு இன்னும் தொடங்கவில்லை என்றும், உறுதியானவுடன் உங்களுக்கு தெரிவிப்போம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
