பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ சார்பில், ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தியும், டெட் தேர்விலிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வலியுத்தியும், காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரியும், இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பளார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
