சனாதன தர்மத்தை நீண்டகாலம் எடுத்துச் செல்வதற்கு நாம் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், உங்கள் மதம் பலமானதாக இருந்தால் சனாதன தர்மமும் பலமாக இருக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகிருஷ்ண கான சபா மற்றும் பாகவத சேவா அறக்கட்டளை சார்பில் நாம சங்கீர்த்தனத்தின் வெள்ளி விழாவை சென்னையில் ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், நமது பாரதம் என்பது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சனாதன தர்மத்தின் சக்தி என்றும், சனாதன தர்மத்தை நீண்டகாலம் எடுத்துச் செல்ல சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கு அதைக் கொண்டு செல்லும் பொறுப்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உங்களின் மதம் பலமாக இருந்தால் சனாதன தர்மம் பலமாக இருக்கும், மதம் பலவீனமாக இருந்தால் நீங்கள் பலவீமாகி விடுவீர்கள். நிலையான பாரதம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மிகவும் தேவையானவர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.















