தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தொடர்ந்து, உயர்ந்து கொண்டிருக்கும் தங்கம் விலையால் சாமான்ய மக்களும், ஏழை மக்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையும் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 110 ரூபாய் உயர்ந்து 13 ஆயிரத்து 280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 880 ரூபாய் அதிகரித்து, முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாயை எட்டியுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 307 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா விதிக்கும் வரி உயர்வு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாகவும், இந்த போக்கு தொடருமானால் இந்த ஆண்டு டிசம்பருக்குள் சவரன் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை எட்டி விடும் என நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version