தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அவ்வப்போது அதிகரிக்கும் ஆபரணத் தங்கம், சொற்ப அளவிலேயே குறைகிறது. வாரத்தொடக்கத்தில் இரண்டு நாட்களில் சவரனுக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் அதிகரித்த நிலையில், நேற்று சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது.
இந்தநிலையில், இன்று காலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாயும், பிற்பகலில் மேலும் 800 ரூபாயும் அதிகரித்து, அதாவது ஒரேநாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து, 95 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் 11 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வௌ¢ளியின் விலை நேற்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று காலை 9 ரூபாயும், பிற்பகலில் ஒரு ரூபாயும் என, 10 ரூபாய் அதிகரித்து 183 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
