துபாயில் நடந்த தேஜஸ் போர் விமானம் விபத்தில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அஞ்சலி செலுத்தினார்.
115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும், போர் விமானக் கண்காட்சி, துபாயில் நடைபெற்றது. இதில், சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் விமானம், கீழே விழுந்து நொறுங்கியதில், விமானி நமன் சியால் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது உடல் தனி விமானம் மூலம், சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் சொந்த ஊரான இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள, பாட்டியல்கர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக, சூலூர் விமானப்படை தளத்தில், நமன்சியால் உடலுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
விபத்துக்குள்ளான தேஜாஸ் விமானி உடலுக்கு அஞ்சலி
