செங்கோட்டையன் ஒரு துரோகி – எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு

செங்கோட்டையன் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டு, துரோகம் செய்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக, எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும், எடப்பாடி பழனிசாமி, இன்று கோபிச்செட்டி பாளையத்தில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது, உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில், கொங்கு மண்டலத்திற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து கொண்டே, கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், முதலில் கட்சி பதவி பறிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து அவர் விரோதமாக செயல்பட்டார், அதிமுகவுக்கு கெடுவிதித்தார். இதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று, விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, நிரந்தர டிஜிபியை இதுவரை நியமிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தோம். திமுக அப்படி சாதனை ஏதும் செய்திருக்கிறதா? என்றும், எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Exit mobile version