தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், மத்திய அரசின் கைப்பாவையாக, ஏதேச்சதிகார போக்குடன் செயல்பட்டுவரும், தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் மற்றும் பிஜேபிக்கு எதிரான தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கிவிட்டு, தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதி திட்டத்தோடு, பிஜேபி அரசை தனக்கு பாதுகாவலாக வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் இதை செய்திட முயன்றுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
