மோசமடைந்த காற்றின் தரக்குறியீடு – வாழத்தகுதியற்ற இடமாக மாறும் டெல்லி

தலைநகர் டெல்லியில் இன்று காலை அடந்த பனிமூட்டத்துடன், காற்றின் தரம் மிகுந்த நச்சுத்தன்மையுடையதாக மாறியுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

மாநகரம் முழுவதையும் நச்சுப் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகே நிலவும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. டெல்லியில் இன்று காலை காற்றின் தரக்குறியீடு 347 ஆகப் பதிவாகியுள்ளது. இது மிகவும் மோசமான அளவாகும் என்ற மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி மட்டுமல்லாது, நொய்டா, ஹரியானாவின் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலை நீடிப்பதாக தகவல்கள் தெரிவ¤க்கின்றன.

Exit mobile version