இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 போட்டி, காபாவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான அபிஷேக் ஷர்மாவும், சுப்மனி கில்லும், ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தனர். 4 புள்ளி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 52 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
சற்றும் குறையாமல் பெய்த மழை காரணமாக ஐந்தாவது டி20 போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 2 -1 என்ற கணக்கில், இந்தியா தொடரைக் கைப்பற்றியதோடு, ஒரு நாள் தொடரை இழந்ததற்கு ஆஸ்திரேலியாவை பழி தீர்த்தது. தொடக்க பேட்டர் அபிஷேக் ஷர்மா தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியா அணி, சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















