தாம்பரம் அருகே கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட வடமாநில நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் சுற்றுவட்டாரத்தில், கஞ்சா சாக்கலெட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்டதாக, பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்பாபு மற்றும் அனில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 120 கஞ்சா சாக்கலெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
