திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள், கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த தமிம் அன்சாரி-வசந்தி தம்பதிக்கு ரியாஸ், ரிஸ்வான் என்ற இரு மகன்கள் இருந்தனர். இன்று சிறுவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், சகோதரர்கள் இருவரும் வீட்டின் எதிரே உள்ள கோவில் குளத்தின் அருகே விளையாடியுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் விழுந்த இருவரும், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

















