திரைப்பட உலகில் 50 ஆண்டுகள் தொடர்ந்து நீடித்து வருவதால், நடிகர் ரஜினி காந்துக்கு, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. நாடு முழுவதும் உள்ள திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
விழாவின் நிறைவு நாளான வெள்ளியன்று, நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருது பெற்றது குறித்து பேசிய ரஜினிகாந்த், தனது 50 ஆண்டு கால சினிமா பயணம் வேகமாக ஓடி விட்டது என்றும், எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகராகவே பிறக்க விரும்புவதாகவும் கூறினார்.















