வண்டலூர் அருகே ஏரி, வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வண்டலூரை அடுத்துள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சியில், 9 வார்டுகளில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் சித்தேரி, பெரிய ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், பெரிய ஏரிக் கரையோரமும், அதை ஒட்டி அமைந்துள்ள போக்கு கால்வாய், வனப்பகுதியையும் ஆக்கிரமித்து, பெரிய பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆள் அரவமற்ற காட்டில் ஏரியை ஆக்கிரமித்து புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியதால், சந்தேகமடைந்த மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்தவித பதிலும் அதிகாரிகள் அளிக்காததால், ஏரி, வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளனர்.
